கடிகாரம்
வீட்டுச் சுவர்களில்
வீற்றிருக்கும்
ஒரு விஞ்ஞான விந்தை
விதவிதமான வடிவத்தில்
உலகமெங்கும்
உயர்ந்த இடத்தில்
இருக்கும்
உழைப்பின் உவமானம்
மானிட சுயநலனுக்காக
சுவற்றில் சிறை பிடிக்கப்படும்
ஆயுள் தண்டனை உழைப்பாளி
ஓய்வு என்பதையே
ஒதுக்கி வைத்த
ஒப்பற்ற காலத்தின்
கலங்கரை விளக்கு
பள்ளிக் குழந்தைகளும்
அலுவலக பணியாளர்களும்
அச்சம் கொள்ளும்
உயிரற்ற ஆசாமி
இதயங்களுக்கும்
கடிகாரங்களுக்கும்
ஒரு ஒற்றுமை உண்டு
இதயங்கள்
ஓய்வெடுத்தால்
உடல்
உயிரற்றுப் போகும்
கடிகாரங்கள்
ஓய்வெடுத்தால்
இவ்வுலகமே
உயிரற்றுப் போகும்
பன்னிரெண்டு
பார்வையாளர்கள்
குழுமியிருக்க
சின்ன முள்ளும்,
பெரிய முள்ளும்
சுற்றிச் சுற்றி வந்து
சடுகுடு ஆட
நொடிமுள்ளோ நடுவராக
நோட்டமிட நடக்கின்ற
விளையாட்டு
உலகத்தின்உயிர் மூச்சு...
நன்றி: பிரதிபலிப்பு (2007)
நன்றி: பிரதிபலிப்பு (2007)


0 comments:
Post a Comment