விருதுகள்
ஆண்டுதோறும் அரசு சார்பில் திரைப்படத் துறையினருக்கு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர் என்றெல்லாம் விருதுகள் வழங்கப்படுவதைப் போன்று அனைத்து அரசுத் துறைகளிலும் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு ஒட்டு மொத்தமாக ஒரு விழா எடுத்து சிறந்த ஓட்டுநர், நடத்துநர், சிறந்த கிராம நிர்வாக அதிகாரி, சிறந்ந தாசில்தார், சிறந்த மருத்துவர், சிறந்த செவிலியர் என்றெல்லாம் விருதுகள் வழங்கினால் அது அவர்களை கௌரவிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களையும் லஞ்சம் தவிர்த்து, நியாயமாக மற்றும் துடிப்பாக செயல்படுவதற்கு ஊக்குவிப்பதாக அமையும். சில துறைகளிலும், குடியரசு, சுதந்திர தினம் போன்ற தினங்களில் நல்லாசிரியர் போன்ற விருதுகள் வழங்கப்ட்டாலும் அனைத்து துறை அரசு ஊழியர்களையும் ஒருங்கிணைத்து அனைத்து நிலையிலும் உள்ள ஊழியர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டால் நன்றாக இருக்குமே. இதற்கெல்லாம் செலவுகள் அதிகாகும் என்றால் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் ஒரு பொன்னாடை போர்த்தினால் கூட அது அவர்களுக்கு மிகப்பெரிய விருதாக அமையும்.


0 comments:
Post a Comment