இலவச லேப்-டாப் விபரீதமாகும்
இலவச, 'லேப் - டாப்' படிப்பிலும், முன்னேற்றத்திலும் ஏதோ புரட்சியும், மறுமலர்ச்சியும் மாணவ, மாணவியரிடையே ஏற்படுத்தப்போவதாகநினைக்கின்றனர்.
உண்மையிலேயே லேப் - டாப்கள், மாணவர்களுக்கு அத்தியாவசிய தேவையா? மாணவர்களின் படிப்பிலும், வளர்ச்சியிலும் , இந்த லேப் - டாப்கள் முக்கிய பங்கு வகிக்கப் போகிறதா; மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு, கட்சிகளால் அறிவிக்கப்பட்ட திட்டம்தானா?
நம் அரசியல் வாதிகள், மாணவர்களின் நலனில் அக்கறை உள்ளவர்களாகஇருந்தால், இலவச, லேப் - டாப் தருவதை விட, அவர்கள் செய்ய வேண்டியகடமைகள் நிறையவே உள்ளன. ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில், ஆசிரியர்களை புதிதாக நியமிப்பதால், மாணவர்களின் கல்வியறிவுபெருகுவதோடு, வேலையில்லாதவர்களுக்கு வேலை தந்த பலன் கிட்டும்.
இடவசதியும், இருக்கை வசதியும், இல்லாத பள்ளிகளில், போதிய கவனம்செலுத்தினால், மாணவர்கள் மிகுந்த பயனடைவர். பள்ளி துவங்கும் மற்றும்முடியும் நேரங்களில், சிறப்பு பஸ்களை இயக்கினால், கிராமப்புற மாணவர்கள்சிரமமின்றி பள்ளிகளுக்கு சென்று வர ஏதுவாக அமையும்.
அடிப்படை வசதிகளையே பூர்த்தி செய்யாத நிலையில், இந்த, லேப் - டாப்கள், உருப்படியாக எந்த பயனையும் தரப்போவதில்லை.
இன்னும் சொல்லப்போனால், இந்த இலவச, லேப் - டாப்கள், மாணவசமுதாயத்திடையே எதிர்மறையான விபரீதத்தையே உருவாக்கும். தற்போதுகேமரா மொபைல் போன்களின் விளைவுகள், நாம் அனைவரும் நன்கு அறிந்ததே! கேமரா மொபைல் மூலமாக பெண்களை தவறாக படம் பிடிப்பது, ஆபாசப்படங்கள் பார்ப்பது போன்ற பழக்கங்களுக்கு அடிமைப்பட்டுள்ளது இன்றையமாணவ சமுதாயம்.
இலவசமாக, லேப் - டாப் கொடுத்தால், இத்தகைய செயலுக்கே அதிகப்படியானமாணவர்கள் பயன்படுத்துவர். ஏற்றுகொள்வதற்கு கொஞ்சம் நெருடலாகஇருந்தாலும், இலவச, லேப் - டாப்கள், இத்தகைய விளைவுகளையே நிச்சயம்ஏற்படுத்தும்.
இலவசங்கள் அறிவித்து, மக்கள் மீது நீங்கள் காட்டும் அக்கறை போதும்!
நன்றி: தினமலர் (06-04-2011)


0 comments:
Post a Comment