Sunday, May 22, 2011

மனிதம் மரணித்து விட்டது

இறைவா... இப்பூவுலகில்..

வெந்நீரில் மீன்களை
நீந்த விட்டு
ரசிக்கிறார்கள்

பூக்களை
வாகன சக்கரங்களால்
நசுக்குகிறார்கள்

கவிதை புத்தகத்தை
கிழித்து
பொட்டலம் போடுகிறார்கள்

பேராசை
பேய் பிடித்து
அந்நிய நாட்டில்
கலகம செய்கிறார்கள்

பிணக் குவியலில்
சிம்மாசனம் இட்டு
அமர்கிறார்கள்

தவித்த வாய்க்கு
தண்ணீர் தர
மறுக்கிறார்கள்

நாகரிக வளர்ச்சியால்
ஒழுக்கத்திற்கு
விலங்கிடப்பட்டது

விஞ்ஞான வளர்ச்சியால்
கற்புகள்
களவாடப்படுகிறது

மனிதம்
மரணித்து விட்டது
சகோதரத்துவம்
வலை வீசி
தேடப்படுகிறது

பயமாக இருக்கிறது
இறைவா...
இவ்வுலகில் வாழவே

எனக்கு பயமாக
இருக்கிறது

நீதான்
எல்லோரையும்
காப்பாற்ற வேண்டும்
அனைவருக்கும்
நேர்வழியைக்
காட்ட வேண்டும்.

நன்றி: சங்கமம் (2007)

0 comments: