தேர்தல்
'என்னடா, இன்னக்கி இண்டர்வியூ போனியே என்னாச்சு...?'
'மூணு ரவுண்ட் கிளியர் பண்ணீட்டேண்டா... கடைசி ரவுண்ட்ல போயிடுச்சு...'
'ஓ அப்டியா.. பரவாயில்ல விடுடா.. அடுத்த இண்டர்வியூல பாத்துக்கலாம்...'
'டேய்... என்னத்தடா இப்படி யோசிக்கிற.. அடுத்த இண்டர்வியூ கண்டிப்பா சக்ஸஸ் ஆகும்டா கவலப்படாத...'
' அது இல்லடா... இன்னக்கி போனது ரொம்ப சின்ன கம்பெனிடா.. அங்க வேலை பாக்குறவங்க ஐம்பது பேர் கூட இருக்கமாட்டாங்க.. அவங்கள மேனேஜ் பண்ண அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்டிங் இண்டர்வியூக்குத்தான் போயிருந்தேன். அதுக்கே நாலு ரவுண்ட் வச்சு எல்லாரையும் வடிகட்டி புத்திசாலித்தனம், திறமை, படிப்பு, அறிவு எல்லாத்தையும் பார்த்து ஒருத்தர செலக்ட் பண்ணாங்கடா...'
'இண்டர்வியூனா அப்படித்தான் இருக்கும்.. இதுல யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு...?
'ஒரு சின்ன கம்பெனிக்கு அசிஸ்டெண்ட் மேனேஜர் வேலைக்கே இப்படிலாம் பரிசோதிச்சு தகுதியான ஆளா பாத்து எடுக்குறாங்க.. ஆனா, நம்ம நாட்ட ஆளப்போறவங்கள மட்டும் எப்படிடா நம்ம மக்கள் அவரோட படிப்பு, குணம், ஒழுக்கம், திறமை எதையுமே பாக்கமா, முன்னப்பின்ன தெரியாத ஒருத்தர கண்ணமூடிட்டு தேர்ந்தெடுக்குறாங்க..? சிலபேர் கட்சி பார்த்து ஓட்டு போட்றாங்க.. சில பேர் பணம் வாங்கிக்கிட்டு ஓட்டுப் போட்றாங்க... இப்படியே காலாகாலத்துக்கும் நடந்தா எப்படிடா நம்ம நாடு உருப்படும்...?
'நீ சொல்றது சரிதான்டா... அந்த கம்பெனி முதலாளிட பொருத்தவரைக்கும் திறமையான, தகுதியான ஆள தேர்ந்தெடுத்து மத்தவங்கள்ட சரியா வேலைவாங்கி கம்பெனிய முன்னேற்றனும்கிற எண்ணம் இருக்கு... அதனாலதான் திறமைக்கும், அறிவுக்கும் முக்கியத்துவம் தர்றாரு... ஆனா, நம்ம நாட்டு மக்கள் இது நம்ம நாடு.. நாட்டை ஆளப்போறவர் தகுதியானவரா இருக்கணும், நாட்டை முன்னேத்துறவரா இருக்கணும்னுலாம் எதிர்பார்க்குறது இல்லையே.. இப்படி இருந்தா கண்டிப்பா நம்ம நாடு உருப்படாதுடா...?
'எப்பதான்டா நம்ம நாட்டுக்கு ஒரு விடிவு காலம் வரும்...?
'என்னக்கி நம்ம நாட்டு மக்களுக்கு இது நம்ம நாடு, இந்த நாட்டுக்கு நாமதான் முதலாளி.. ஆட்சி செய்யப்போறவங்க நமக்கு தொழிலாளி மாதிரி.. அவங்ளோட தகுதியெல்லாம் பார்தது சரியான ஆள தேர்ந்தெடுக்கணும் என்ற பொறுப்புணர்வு வருதோ..., அரசியல்வாதிங்க இலவசம் என்ற பேர்ல பிச்சை போட்றத விரும்பாம, கட்சி வெறி பிடிச்சு அலையாம நாட்டுப் பற்றோட ஓட்டுப் போட்றாங்களோ அன்னக்கித்தான்டா நம்ம நாட்டுக்கு விடிவுகாலம்...'
அப்படியொரு நாள் வருமாடா...?
'இதப்பத்தி நீயும், நானும் மட்டும் யோசிச்சா வராது... நாட்டு மக்கள் எல்லாரும் யோசிச்சா கண்டிப்பா சீக்கிரம் வரும்டா...'


1 comments:
I LIKE IT
Post a Comment