என் அன்புள்ள அம்மாவுக்கு..
அம்மா என்னும் புதையலில் அன்பு என்னும் பொக்கிஷம் உண்டு
பாசம் என்னம் பாடம் அன்னை என்னும் புத்தகத்தில் உண்டு
எட்டுத் திக்கும் தாயின் அன்பு இருந்தாலும் என்
தாயின் அன்புதான் தரணியிலே உயர்வு
அன்போடு பாசத்தை நீ தந்ததால் இங்கு சந்தோஷ
அரவணைப்பில் நான் வாழ்கிறேன்
பொன்னான பொருள் ஏதும் வேண்டாம் அம்மா
இங்கு உன்னோடு வாழ்கின்ற வரம் போதுமே...
பத்து மாதம் என்னை நீ கருவினிலே சுமந்தாய்
ஆயுள் முழுவதும் நானே என் நெஞ்சில் உன்னை சுமப்பேன்
என் கண்களிலே காட்சிகளாய்
இதயத்திலே துடிதுடிப்பாய் வாழ்கிறாய் நீ வாழ்கிறாய்...
பூங்காற்றின் வருடல்கள் நினைவூட்டுதே
தாயே நீ என்னைத் தாலாட்டிய தருணங்களை
உலகத்தில் உயிர்வாழ உயிர் வேண்டுமே
நான் ஒழுக்கத்தில் சிறந்தோங்க நீ வேண்டுமே
உன்னை எந்தன் தாயாய் அவன் கொடுத்ததற்கு நன்றி
உள்ளம் தினம் வேண்டும் உன் நலனுக்காக வேண்டி
உன் கண்டிப்பிலே அன்பு உண்டு
தண்டிப்பிலே கருணை உண்டு
காண்கிறேன் நான் காண்கிறேன்.
நன்றி: சங்கமம் (2007)


0 comments:
Post a Comment