தீண்டாமை
வாழ்வாங்கு வாழும்
இப்பூவுலகில்வஞ்சணை எண்ணத்துடன்
வலம் வரும்
மிருகத்தோல் போர்த்திய மனிதா
அனைவரும் ஆதம், ஹவ்வாள்
சந்ததியில் பிறந்தவர்கள்தாம்,
நீயும் அச்சந்ததியில்தான் பிறந்தாய்
என்பதை ஏனோ
நீ மறந்தாய்?
இறைவன் படைப்பிலே அரிய படைப்பு என்றால்
அது மனிதப் படைப்பு மட்டுமே
வேண்டாம் மனிதா உனக்குள்ளே
இப்பிரிவினைக் கொள்கை
எண்ணங்களை சீர்படுத்தி அறிவுப் புரட்சியை ஏற்படுத்தி
உனது பிரிவினைக் கொள்கையை
அதில் உட்படுத்திப் பார்
நீதான் உலக மகா மடையன் என்று கூறும்
உனது மனமே...
அனைத்தையும் கண்டு கொண்டிருக்கிறான் இறைவன்
என்னும் சீரிய ஞானம்
உனது நெஞ்சக் கல்வெட்டில்
நீங்கா இடம் பிடிக்க வேண்டும்
அப்போதுதான் உன்
அகந்தை அட்டூழியத்திற்கு
முற்றுப் புள்ளி.
நன்றி: பிரதிபலிப்பு (2005)


0 comments:
Post a Comment