முதியோர் இல்லம்
'முதியோர் இல்லம்'
முகவரி இல்லாதவர்களுக்கு
அடைக்கலம் தருகிறது
முதியோர் இல்லம்
ஒரு சின்ன திருத்தம்
இவர்கள்,
முகவரி இல்லாதவர்கள் அல்ல..
முகவரியைத் தொலைத்தவர்கள்..
முகவரியை தொலைத்தவர்கள்
இதுவும்
ஏற்புடையதாக இல்லையே..?
பிள்ளைகள் என்னும்
முகவரியை
இவர்கள் தொலைக்கவில்லையே
முகவரிகள்தானே
இவர்களை விட்டுப்
பிரிந்திருக்கிறது
ஐயகோ..
முதியோர் இல்லத்தில்
இருப்பவர்களை
என்னவென்று அழைப்பது...?
இவர்களை அழைப்பதற்கு
வார்த்தை கூட
சொந்தமாக இல்லையே
இரக்கமற்ற மனிதனே..
நீ பஞ்சு மெத்தையில்
தூங்குகிறாய்
கயிற்றுக் கட்டில் வேண்டாம்
உன் வீட்டில்
கட்டாந்தரை கூடவா இல்லை?
உன் பெற்றோரை உன்னோடு
வைப்பதற்கு...
உன் இதயத்தை மட்டும்
இறைவன் கற்களால்
படைத்தானா?
இப்படி இறுக்கமாக
இருக்கிறது...
பெற்றோருக்காக
இளக மறுக்கிறது...
துடிக்கிற இதயம்
காதலிக்காகவும்,
மனைவிக்காகவும்
மட்டும் துடிக்கக் கூடாது
பெற்றோருக்காகவும்
துடிக்க வேண்டும்...
நம் இதயத்தை நனைக்கும்
இரத்தம் யாருடையது
நம் பெற்றோருடையது அல்லவா...
நன்றி மறக்கலாமா...?
அன்று உன் பெற்றோர்
இரத்தத்தை வியர்வையாக
சிந்தினார்கள்
உன் முன்னேற்றத்திற்காக...
இன்று இரத்தத்தை
குருதியாக
சிந்துகிறார்கள்
தன் துயரத்திற்காக...
பெற்றோர்கள்
தான் உண்ணும்
சோற்றுப் பருக்கையில்
தன் பிள்ளைகளின்
முகம் கண்டால்
உண்ணும் உணவு
ஜீரணிக்கும்
ஊரார் முகம்
கண்டால் எப்படி
ஜீரணிக்கும்...?
முதிய வயதில்
தனியே வாழ்ந்தால்
உயிரும் பாரமாகுமே...
பெற்றோர்களை
முதியோர் இல்லத்திற்கு
அனுப்பியவர்களே
உங்களுக்கோர் எச்சரிக்கை:
'நாளை உங்களுக்கும்
ஒரு மகன் பிறப்பான்
இன்று உங்கள் பெற்றோருக்கு
நேர்ந்த கதி
நாளை உங்களுக்கும்
நேரலாம்'
நன்றி: JAMFO (2007)

0 comments:
Post a Comment